Wednesday, June 17, 2020






 

மலரொன்று மலர்ந்தது,
என் கதைகேள் என்றது,
என்னவென்றேன்.
நாடிவந்த வண்டுக்கு,
தேன்தர நான் மறந்ததில்லை.
நாளை மடிவேன் என்றறிந்தும்
நான் மலர மறுத்ததில்லை,
புரிந்ததா?
புரியவில்லையென்றேன்,
மனதை மலராக்கு, மலரச்செய்,
உன் மரணத்திலும் அது பேசப்படும்,
இப்போது புரிந்தது.
இனி நானும்................🥀