Tuesday, July 19, 2016

கேட்பதும்  கொடுப்பதும்

இறைவன்
மனிதனிடம் கேட்பது,
உள்ளத்தே ஊற்றெடுக்கும்
உண்மையான அன்பை.

மனிதன்
இறைவனுக்குக் கொடுப்பது
உள்ளத் தெளிவில்லாத
உயரிய காணிக்கைகள்.

மனிதன்
இறைவனிடம் கேட்பது
என்றுமே குறையாத
ஏராளமான செல்வங்கள்.

இறைவன்
மனிதனுக்குக் கொடுப்பதோ
என்ன? என்ன? என்ன?


                                            ருத்ரா

No comments:

Post a Comment