காதல் மனம்
தனியே சிரித்திருக்கும்.
தனிமையில் நிலைத்திருக்கும்.
காணுமிடமெல்லாம் தன்
காதலையே பார்த்திருக்கும்.
ஊனுள் உருகிநிற்கும்.
உள்ளத்தை மறைத்து வைக்கும்.
தாம் மட்டுந்தானென்றே
தம்மையே புகழ்ந்து நிற்கும்.
காலத்தால் அழியாது என்றும்
காவியத்தி உள்ளோமென்றும்
போதை தலைக்கேறினாற் போல்
பொய்களும் உரைத்து நிற்கும்.
அன்னைக்கு அடங்கேனென்றும்
தந்தை சொற் கேட்கேனென்றும்
இன்பம் காதல் ஒன்றே என்று
எப்போதும் இறுமாந்திருக்கும்.
ருத்ரா
No comments:
Post a Comment